இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35 மானிடரில் நல்லவர்கள் யாரென்றே ஓர்நாள் வள்ளலேநும் மிடத்தினிலே சகாபாக்கள் கேட்க தானிருக்கும் வீட்டருகே வாழ்ந்திருக்கும் மாந்தர் தக்கவரென் றுரைக்கும்படி வாழ்பவரே என்றீர் கோனெனவே பதவிபெற்றும் குடிசையிலே வாழ்ந்த குணக்குன்றே குவலயத்தைத் திருத்தவந்த தூதே வானவரும் வாழ்த்தத்தினம் மறையவனும் வாழ்த்த வாழ்ந்தவரே முஹம்மதரே வாழியரோ வாழி.