இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36 உழைக்காமல் வாழ்ந்திடுதல் இஸ்லாம்நெறி யாகா உண்ணுவதைத் தனித்துண்ணல் இஸ்லாம் நெறியாகா பிழைக்கவெண்ணிப் பொய்யுரைத்தல் இஸ்லாம்நெறி யாகா பித்தலாட்டம் கொலைகளவும் இஸ்லாம்நெறி யாகா கழைக்கூத்தா டிடுதலுடன் காண்பதுவுங் கூடக் கணித்துரைக்கின் மேலான இஸ்லாம்நெறி யாகா தழைக்கயிவை நும்மனத்தில் என்றுரைத்த மேலோன் தகுநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.