உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 . பாராட்டிய நபிகள் பெருமானார், "இன்னல்லாஹ யுஅய்யிது ஹஸ்ஸான (ன்) பிரூஹில் குதுஸி' திடமாக, புனித இறையுணர்வைக்கொண்டு அல்லாஹு தஆலா ஹஸ்ஸானுக்கு உதவி செய் கிறான்- என்று குறிப்பிட்டார்கள். உ "நலம் விளையும் கவிதை புனைபவன் நாயனால் தூண்டப்படுகிறான், அவன் கவிதை ஆண்டவனின் நல்லருளாகும்" என்பதே இதன் விழுமிய கருத் தாகும். அத்தகைய கவிதைப் பாரம்பரியத்தில் பங்கு கொள்கிறது, சிறப்புமிக்க இந்நூல். இதனைச் சுவைக்க, இதன் காவிய மணத்தை நுகர, இதன் வரலாற்றுப் பின்னணியை ரசிக்க, வளமார் கருத்துக்களைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அழைப்பதில் பெருமித மடைகிறேன். ‘“என்னெழுத்தைப் படிப்பவர்கள் எந்நாளும் வாழ்வில் ஏற்றம் பெற இறைவனைத் துதித்திடுவாய் நெஞ்சே!' என்று கவிஞர் வாசகர்களுக்காக உளம் உருகச் செய்யும்'துஆ'வுக்கு : "ஆமீன் என்று கூறி, "இத் தகைய அருங் கவிதையை, அழகுக் கவிதையை சுவை புதிது, பொருள் புதிது; வளம் புதிது; சோதிமிக்க நவகவிதை; எந்நாளும் மாளாத மா கவிதை' என்று பிறிதொரு கவிஞன் வர்ணித்த இலக்கிய வரிசையில் இடம்பெறும் உயர் கவிதையை - இயற்றித் தந்த ஆசிரியரும், என்றும் ஏற்றம் பெற்றவராக, இலக்கியத்தின் வாயிலாக இறைபணி செய்பவராக வாழ அருள் செய்வாய் இறைவா!' என்றும் இறைஞ்சி முடிக்கின்றேன். ஆலந்தூர் சென்னை-16. 16-12-1391. 2-2-1972. எம். அப்துல் வஹ்ஹாப்.