உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாராட்டுரை எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் அண்ணலார் (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் தம் தோழர்கள் மீதும் உண்டா கட்டும். இருலோகத்தூதர் அண்ணல் அஹ்மதுநபி (ஸல்) அவர்களின் வாழ்வு, வாக்கு, இவைகளைக் கவி நடை யிலும், காவிய நடையிலும் சித்திரிக்கும் நூல்கள் தேன்சொட்டும் தமிழ் மொழியில் பல உண்டு. நம் கவி கா மு ஷரீப் அவர்கள் படைத்த நபியே! எங்கள் நாயகமே” என்ற கவிதை நடையில் அமையப் பெற்ற நூல் என் பார்வைக்கு எட்டியதும் படித்தேன் பரவசமடைந்தேன். தமிழில் போதிய அளவு திறன்படாத சிறுவர் களும் தாய்மார்களும் கூட படித்து இன்புறும் அளவில் அமையப்பெற்றுள்ளது. பெருமானாரின் பெருவாழ்வை, பெருவாக்கை, நய முடன் நல்ல தமிழில் சித்தரிக்கும் நூலின் ஆசிரியர் கவி கா மு ஷரீப் அவர்களை பாராட்டுகிறேன். இந்நூல் மக்களிடையே பரவி மக்கள் அதனால் பெரும் பயனடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன், ஆமீன். 27-2-72 சிங்கப்பூர்-7 } மௌலவி A. அப்துல் ஜலீல் பொதுச் செயலாளர் தென்னிந்திய ஜம்இய்யத்துல் உலமா.