உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 படாடோப வாழ்க்கையுமே இஸ்லாம்நெறி யாகா பசித்தோரை விட்டுண்ணல் இஸ்லாம்நெறி யாகா அடாவடிசெய் கின்றதுமே இஸ்லாம்நெறி யாகா அக்கிரமம் புரிந்திடுதல் இஸ்லாம்நெறி யாகா கொடாதுபணம் சேர்ப்பதுவும் இஸ்லாம்நெறி யாகா குடிப்பதுவும் நடிப்பதுவும் இஸ்லாம்நெறி யாகா திடமாயிதை அறிந்திடுக நல்லவரே என்ற திருநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.