உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 எப்பாடு பட்டேனும் கற்றிடுதல் நன்று எவர்கேட்ட போதிலுமே யீகுவது நன்று தப்பேதும் செய்யாத வாழ்க்கைமிக நன்று. தனக்கென்று வாழாமை யாவினுமே நன்று ஒப்பரிய பெரும்பதவி கிடைத்திட்ட போதும் உம்வாழ்விற் கதைப்பயன்ப டுத்தாமை நன்று செப்பிடுவார் பலகடவுள் ஒப்பாமை நன்று தெரிகவென்ற முஹம்மதரே வாழியரோ வாழி.