இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55 எத்தொழிலைச் செய்தாலும் இழிவில்லை வறிஞர்க் கீவதுபோல் சிறப்பான செயலேதும் இல்லை நித்திரையைக் குறைப்பதுபோல் நல்லதொன்றுமில்லை நேர்மைக்காய்ச் சாவதிலும் தியாகம்வே றில்லை உத்தமரை மனம்நோகச் செய்வதினும் கெட்ட உலுத்தசெயல் பிரிதேதும் இல்லவே யில்லை உணர்கயிதை மேலவரே 2715-7 எனஎடுத்துச் சொன்ன உயர்நபியே முஹம்மதரே வாழியரோ வாழி.