பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


14 .டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வழிகாட்டி மரமானது வழியைத்தான் காட்டும், துணைக்கு வராது. W நம்மைச் சுற்றியுள்ளவர்களையும்நாம் அப்படித்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். நடைமுறை வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு யார் உதவி செய்வார்கள் என்றால், அதற்கு ஒரே பதில் நாம்தான். "தானே தனக்குத் தலைவனும், நட் டானும்!" என்று ஒரு பாடல். o 'தன்னைத் தலையாகச் செய்வானுந்தான். "தானே தனக் குப் பெருமையும் சிறுமையும்". இந்தப் பாடல் வரிகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். நம் வயிற்றுப் பசிக்கு நாம்தான் சாப்பிட வேண்டும். பிறர் சாபபிட்டால் நமக்கு எப்படி பசி அடங்கும்! நமது நோய்க்கு நாம்தான் மருந்து சாப்பிட வேண்டும். பிறர் சாப்பிட்டால் என்ன பயன் கிடைக்கும்? நமது முன்னேற்றத்திற்கு நாம்தான் உழைக் வேண்டும். பிறரை எதிர்பார்த்து என்ன பயன்? - மனிதனை மிருகங்களிலிருந்து பிரித்து, வேறு படுத்தி, உயர்த்திக் காட்டுவது ஆறாவது அறிவு. அதுதான் பகுத்தறிவு.