பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2Ꮾ டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா காட் டிவிடும் TTF) நாம் மிகவும் கவனமாக வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காரணம், நமக்கு நாமே உதவி என்பதால்தான். நம்மை உயர்த்திக் கொள்ளத்தான் நாம் முயல்கின்றோம். தாழ்த்தவோ வீழ்த்தவோ இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. எவ்வாறு நமக்குரிய வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் வேலையைப் பற்றிய விவரத்தைப் புரிந்து கொள்வோம். வீட்டுக்கு வாசற்படி போல இது இருக்கிறது. - வேலை என்பது வாழ்வின் ஆதாரம் மட்டுமல்ல. வேலையில் ஈடுபடும்பொழுது, அது நமக்கு அளிக்கின்ற சுகங்கள் பல. பணம்தான் ஒருவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்பதல்ல. ஒரு வேலையில் ஈடுபட்டு, அந்த வேலையை சிறப்பாக முடித்து, சிறந்த சாதனை புரியும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கும் இதய நிம்மதிக்கும் ஈடான நேரம் எதுவுமே இல்லை. வேலையானது மகிழ்ச்சியை மட்டுமா விளைவிக்கிறது? வேறுபல சிறப்புக்களையும் அல்லவா விரைந்து கொடுக்கிறது! ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால் மூன்றுதரமான குணாதிசயங்கள் கொண்டிருக்க வேண்டும்.