பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

35


போகிறோம்! நீங்கள் போட்டோ எடுத்த லட்சணம்...” பாருங்க என்று காட்டிப் பலவாறாகப் பேசிவிட்டுப் போய்விட்டார் பாதிக்கப்பட்ட அந்த மணமகன்.

முடிவு! தனக்குத் தெரியாத தொழிலில் ஈடுபட்ட அந்த ‘அவர்’, போட்டோ கடையையும் மூடிவிட்டார்... பாவம்!

இதுபோல எத்தனையோ சுவையான சம்பவங்களைக் கூறலாம். தெளிந்த அறிவுள்ளவர்கள் கூட, தங்களுக்குத் தெரியாத தொழிலில் ஈடுபட்டதால், தங்கள் சொத்தையும் இழந்து, சுகத்தையும் இழந்து சோகத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்.

ஒருவர் உலகில் உயிர் வாழ்வதற்கு, ஒன்று உத்தியோகத்தில் சேர்ந்தாக வேண்டும். அல்லது தொழில் முறை சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டாக வேண்டும்.

இரண்டில் ஒன்றை - எதுவாக இருந்தாலும் மனிதர்கள் தேர்ந்தெடுத்துத் தான் வாழ்ந்தாக வேண்டும். அது எப்படி என்று எது என்று தேர்ந்தெடுப்பதில் தான் திறமும் தேர்ச்சியும் இருக்கிறது.

மனதுக்குப் பிடித்த வேலையை அல்லது வியாபாரத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் மனிதர்க்கு உரிய மதிக்கூர்மையாகும் என்ற உண்மையை நாம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.