பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/51

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நமக்கு நாமே உதவி 49 நாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். நமது வாழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை நாம் அறியாததா? அதுபோலவேதான் ஒரு செயலும், நாம் தொடங்குகிற செயல், நம்மையறியாமல் ஏற்படுவது அல்ல. எண்ணித் துணிந்து, எத்தனையோ வழி முறைகளை ஆய்ந்து, அவற்றில் தோய்ந்து, வெளி வந்ததன் விளைவுதான் அது. o ஆரம்பிக்கவே பயப்படுகிறவன் எவனும் அரை நொடிக்கூட தொடர முனைய மாட்டான். ஏனெனில் அவனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னம்பிக்கை யற்றவர்கள் கோழைகள். கோழைகளுக்குக் குலைக்கத்தான் தெரியும். கடிக்க முடியாது இப்படி கேலியாக பேசுபவர்களும் உண்டு. ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது. அதனை முடிக்கின்ற வழிகளையும், முறைகளையும், நியதி களையும் நாம் முதலிலேயே நன்கு ஆராய்ந்து தொடங்கி விடுகிறோம். காரியத்தை ஆரம்பித்த பிறகு, நமது கவனமெல்லாம் முடிவிலேதான். அதாவது முடிக்கும் காரியத்திலேதான் இருக்க வேண்டும். 'முடித்துத்தான் ஆக வேண்டும் என்ற முயற்சி யுடன் காரியத்தைத் தொடங்குபவன், முனைப்புள்ள