பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆ ■ E. - on -* ł_ł&%!_W. 6T&T0. ©iff கiசலல்ைய்ன் 62 & நவராஜ T எதிர்கால வெற்றி தான் போடுகின்ற திட்டத்தில் தான் உள்ளது என்று முனைவது மூன்றாவது l-ilq-. தன்னால் தனது திட்டத்தில் வெற்றி பெற முடியும் என்று நம்பி, செயலைத் தொடர்வது நான்காவது படி. இப்படி, படிப்படியாக இலட்சியப் பணியில் நாம் இணைந்து கொண்டால், நமது வாழ்வு இன்ப லோகமாகவே விளங்கும். இன்பக்கனிகளே குலுங்கும். இப்படி செய்ய முடியுமா என்று கேட்பவர்கள் உண்டு. எல்லா மனிதர்களுக்கும் வலிமையில் குறைவை ஆண்டவன் வைக்கவில்லை. மனிதர்கள் தங்களுக் குள்ள சுய நம்பிக்கையில் தான் குறையுள்ளவர்களாக வாழ்கிறார்கள். உலகத்தில் நடக்கும் எல்லாமே நமது முடிவுபோல நிகழ்வதில்லை. அதிர்ஷடத்தால்தான் நடைபெறுகிறது என்பதை மட்டும் நம்புகிறார்கள். அப்படி வாழக்கூடாது என்பதுதான்நமது விருப்பம். நமக்கு நாமே உதவிக் கொள்ள, நம்மால் முடியும் என்று காரியங்களைத் தொடர வேண்டும். அதிலே இலட்சிய நினைவுகள் படர வேண்டும். அப்பொழுது தான் எண்ணியதை எண்ணியது போலவே அடைவோம். அந்தக் கடமையை இன்றே தொடரலாம் அல்லவா!