பக்கம்:நமது உடல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நமது உடல் கூறு அமைந்துள்ளது. உயிரினங்கள் யாவும் உயிரணுக்கள் எனப்படும் மிகச் சிறிய அலகுகளால் ஆனவை. பருத்த யானை பன்னுாறு கோடி உயிரணுக்களாலானது. உடல் முழுவதும் ஒரே ஓர் அணுவிலைான மிகச் சிறிய பிராணிகளும் உள்ளன. அங்ங்னமே நம்முடைய உடலும் கோடிக்கணக்கான உயிரணுக்களால் உண்டாக்கப் பட்டதேயாகும். உயிரணுக்களின் தோற்றம் பெரும்பாலான உயிரணுக்களை நம் ஊனக் கண்களால் காண முடியாது. ஆற்றல் வாய்ந்த பெருக்காடியைக் கொண்டுதான் அவற்றைக் காணல் முடியும். ஒரு சில உயிரணுக்கள் மிக மிக நுண்ணியனவாக உள்ளன. அத்தகைய உயிரணுக்களில் இரண் டரை இலட்ச அணுக்கள் ஒரு வாக்கியத்தின் இறுதியிலுள்ள ஒரு சிறிய முற்றுப் புள்ளியில் அடங்கிவிடும்! ஆயினும், சில உயிரணுக்கள் நமது ஊனக்கண்ணுக்கும் புலகுைம். தாவரங் களின் ஆணிவேரில் காணப்பெறும் மயிர் போன்ற இழைவேர், சில கடற் பூண்டுகள், சில பிராணிகளின் முட்டைகள் ஆகியவை கண்ணுக்குப் புலகுைம் உயிரணுக்களுக்கு எடுத்துக்காட்டுக்க ளாகும். உயிரணுக்கள் பல்வேறு வடிவங்களைக் கொண்டவை. சில உயிரணுக்கள் வட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/10&oldid=773491" இலிருந்து மீள்விக்கப்பட்டது