பக்கம்:நமது உடல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உயிரணுக்கள் நீங்கள் உயிர்க்காட்சிச் சாலைக்குப் (200) போயிருக்கின்றீர்கள் அல்லவா? அங்கு எவற்றைக் காண்கின்றீர்கள் பெரிய யானைகள் உங்கள் கண்ணில் பட்டிருக்கும் ; உயரமான ஒட்டைச் சிவிங்கிகள் உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கும். சிறு குறும்புகள் செய்துவரும் சிறுசிறு குரங்கு களைப் பார்த்திருப்பீர்கள். பல்வேறு வண்ணப் பறவைகளும் பல்வேறு அதிசய விலங்கினங்களும் உங்கட்குக் களிப்பூட்டியிருக்கும். ஒவ்வோர் அறை யிலும், ஒவ்வொரு கூட்டிலுமுள்ள உயிரினங்களி னிடையே அதிகமான வேற்றுமைகளே காணப் உடுவதால் அவற்றினிடையே ஒற்றுமைக் கூறு ஏதும் இல்லே என்றே நீங்கள் நினைப்பீர்கள். உண்மையில் அப்படித்தானே கருதுகின்றீர்கள் t ஆண்டவன் படைப்பாகிய அகிலத்திலுள்ள பல்வேறு உயிரினங்களினிடையேயும் ஒற்றுமைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/9&oldid=773713" இலிருந்து மீள்விக்கப்பட்டது