பக்கம்:நமது உடல்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் 89 இருக்கும் இரண்டு பெரிய சுரப்பிகளும் உணவு 'செரித்தலில் முக்கியமான பங்கினைப் பெறுகின்றன. உணவுப் பாதையும் இந்த இரண்டு சுரப்பிகளும் சேர்ந்த அமைப்பினேயே நாம் செரிவுறுப்பு மண்டலம் (DIGESTIVE SYSTEM) Grgör pi GupËigstsörGoyib. செரிவுறுப்பு மண்டலம் படத்தில் (படம்-40) காட்டப்பெற்றுள்ளது. உற்று நோக்கி அம் மண்டலத்தின் ஒவ்வொரு பகுதியின் இருப்பிடத் தையும் உறுப்புகளின் இருப்பிடங்களையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள். வாயில் செரிமானம் : நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதி மாப்பொருளால் (STARCH) ஆனது. மாப்பொருளின் செரிமானம் வாயில் தொடங்கு கின்றது. மாப்பொருள் வாயில் நன்கு மெல்லப் பெறுங்கால் உமிழ்நீர்ச் சுரப்பிகளில் (படம்-41) ஊறும் உமிழ்நீர் மாப்பொருளில் ஒரு வேதியியல் மாற்றத்தை (CHEMICAL CHANGE) விளைவிக்கின்றது. இதன் காரணமாக மாப்பொருள் ஒருவிதச் சருக்கரையாக மாறுகின்றது. இப் பொருள் நீரில் கரையுங் தன்மையுடையது. இச் சருக்கரையை உடல் உயிரணுக்களின் ஊட்டத்திற்காகப் பயன் படுத்துவது எளிதாகும். . . படத்தை உற்று நோக்கில்ை மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருப்பது தெரியவரும். இவற்றுள் எச்சிற் பெருஞ் சுரப்பிகள் (PARoாம.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/102&oldid=773494" இலிருந்து மீள்விக்கப்பட்டது