பக்கம்:நமது உடல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 நமது உடல் லாகிய உறுப்பு. அது நிமிடம் ஒன்றுக்கு ஏறக் குறைய எழுபது தடவை சுருங்கி விரியும் தன்மை யுடையது. நாம் பிறந்தநாள்தொட்டு இறக்கும் வரையிலும் இவ்வுறுப்பு இங்ங்னம் சுருங்கியும் விரிந்தும் செயற்பட்டுக்கொண்டே இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு தடவையும் சுருங்கி விரி வதைத்தான் நாம் இதயத் துடிப்பு (HEART BEAT) என்று வழங்குகின்ருேம். நம்மிடம் நாளொன் அறுக்கு 100,000-க்கு மேற்பட்ட இதயத் துடிப்புகள் நிகழ்கின்றன. ஒவ்வோர் இதயத் துடிப்பின் பொழுதும் சுமார் இரண்டரை அவுன்சு அளவுள்ள இரத்தம் பெரும் பாய்குழல் (AORTA) வழியாக நமது உடலெங்கும் பரவுகின்றது ; சுமார் மற்ருேள் இரண்டரை அவுன்சு இரத்தம் நுரையீரல் பாய்குழல் வழியாகத் துய்மையாக்கப் பெறுவதற்கு நுரையீரலே (டபNGs) அடைகின்றது. இதல்ை நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 6,500 காலன் இரத்தம் நமது இதயத்திலிருந்து வெளிப்படுத்தப் பெறுகின்றது.1 சாதாரணமாக நமது உடலில் ஒரு காலனுக்குச் சற்றுக் குறைவான அளவே இரத்தம் உளளது. இதயத்தின் அமைப்பு : இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலறைகள் இரண்டும் ஆற்றறைகள் (AURICLES) என்றும், கீழறைகள் இரண்டும் ஏற்றறைகள் (VENTRICLES) என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/119&oldid=773512" இலிருந்து மீள்விக்கப்பட்டது