பக்கம்:நமது உடல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நமது உடல் யில் பெருகும் தன்மையையும் பெற்றுள்ளன. இதல்ை நோய்க் கிருமிகள் எளிதில் நாசமாக்கப் பெறுகின்றன. - இரத்தம் உறைதல் : சில சமயங்களில் நமக்கு வெட்டுக் காயம் ஏற்படும்பொழுது, அக் காயத்தி னின்றும் சிறிது நேரமே இரத்தம் கசிகின்றது. அதன்பிறகு அவ் வெட்டுவாய் சிவந்த திடப் பொருளால் மூடிக்கொள்ளுகின்றது. இதனைத் தான் கட்டிக் குருதி (BlooD CL01) என்று வழங்கு கின்ருேம். வெட்டுக்காயங்கள் குணமாவது படத்தில் (படம் - 53) காட்டப்பெற்றுள்ளது. இவ்வாறு இரத்தம் உறைந்து கட்டிப்போகா விடில், ஒரு சிறு காயத்திலிருந்துகூட ஏராளமான இரத்தம் வெளியேறிவிடும். ஒரு சிலரிடம் காயம் ஏற்படுங்கால், இரத்தம் உறைவதில்லை. இங்கில ஹெமோபீலியா (HEMOPHLA) என்று வழங்கப் பெறுகின்றது. - - - மேற்கூறியவாறு இரத்தம் உறைவதற்குக்கட்டிப் போவதற்குக்-காரணம் என்ன ? இரத் தத்திலுள்ள தகடு போன்ற பகுதிகளே இதற்குக் காரணமாகும். ந ம து இரத்தத்தில் இவிை ஏராளமாக உள்ளன. இவை செவ்வுடலிகளின் பருமனில் நாலில் ஒரு பகுதிப் பருமனேக் கொண் " .. 4 ள்ைளன. இவற்றுள் சில வட்டவடிவமுள்ளவை சில ஒழுங்கற்ற வடிவமுள்ளவை. வெட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/127&oldid=773521" இலிருந்து மீள்விக்கப்பட்டது