பக்கம்:நமது உடல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

套波0 நமது உடல் இதயம், இரத்தம், பாய்குழல்கள், வடிகுழல் கள் ஆகியவை சேர்ந்து நமது உடலின் இரத்த வோட்ட மண்டலம் (CIRCULATORY SYSTEM) ஆகின்றன. - & குருதி பாய்ச்சுதல் : ஒருவர் ஏதாவது ஒரு விபத்தின் காரணமாகவோ அல்லது வே அ) காரணமாகவோ திடீரென்று அதிக இரத்தத்தை இழக்க நேர்ந்தால் மருத்துவர்கள் வேருெருவரின் உடலிலுள்ள இரத்தத்தை எடுத்து அவரது உடலில் பாய்ச்சுவர். இச் செயல் இன்று பெரிய அளவில் நடைபெற்று வருவதை நீங்கள். அறிக் திருப்பீர்கள். இரத்தக் கொடையாளி தரும் இரத்தம் நோயாளியின் இரத்தத்துடன் பொருந்து கின்றதா என்பதை நன்கு உறு திப்படுத்திக் கொண்ட பிறகுதான் இச் செயலில் இறங்க வேண்டும். நோபெல் பரிசுபெற்ற கார்ல் லாண்ட்ஸ் Gl_u@sori (KARL LANDSTEINER) என்ற அறிவிய லறிஞர் மக்களின் குருதியில் கான்குவகைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார். அவை A, B, AB, O என்ற வகைகளாகும். ஒருவகை இரத்தத் தைக் கொண்டவர் அவருடைய உடலுக்கு ஒவ்வாத பிறிதொரு வகை இரத்தத்தை ஏற்ருல் அவர் கடுமையாக நோய்க்கு ஆளாக நேரிடும். இங்குள்ள படம் (படம் - 56) இந்த நான்கு வகைகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/133&oldid=773528" இலிருந்து மீள்விக்கப்பட்டது