பக்கம்:நமது உடல்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சுறுப்பு மண்டலம் 131 இழுத்தால் மணிச்சாடியினுள்ளிருக்கும் இரண்டு இரப்பர்ப் பலூன்களும் உப்பும். இதில் மணிச் சாடியின் அடியிலுள்ள இரப்பர்த்துண்டு உதர விதானத்தையும், கண்ணுடிக்குழலின் மேற்பகுதி மூச்சுக் குழலையும், அடியிலுள்ள அதன் கிளேப் பகுதிகள் மூச்சுக் கிளேக்குழல்களையும், பலூன்கள் நுரையீரல்களையும் உணர்த்துகின்றன. காற்றின் அவசியம் நமது உடல் அசைவ தற்கும், வேலை செய்யும்பொழுது அது நன்கு இயங்குவதற்கும் ஆற்றல் (ENERGY) வேண்டும் அல்லவா ? இந்த ஆற்றல் எப்படி நமக்குக் கிடைக்கின்றது : இரத்தம் உடலில் கொண்டு வந்து சேர்க்கும் ஊட்டப் பொருள்களினின்றும் இது கிடைக்கின்றது. இந்த ஆற்றலைப் பெற வேண்டுமாயின், உயிரணுக்களில் சேமித்து வைக்கப்பெற்றுள்ள ஊட்டப்பொருள்களின் ஒரு சில பகுதிகள் உயிரியத்துடன் சேர்தல்வேண்டும். காம் சுவாசித்தலால் கிடைக்கும் காற்றிலுள்ள உயிரியத்தைச் செவ்வுடலிகள் உயிரணுக்களிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன. உயிரி யமும் ஊட்டப்பொருள்களும் சேர்ந்து எரிதலால் ஆற்றல் வெளிப்படுகின்றது. நாம் ஒடும்பொழுது அதிகமான ஆற்றலைப் பயன்படுத்துகின்ருேம். இந்த ஆற்றலும் மேற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/144&oldid=773540" இலிருந்து மீள்விக்கப்பட்டது