பக்கம்:நமது உடல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'o - ## 10 கழிவு மண்டலம் . - நாம் ஓர் ஆண்டில் உணவு வடிவிலும், நீர் வடிவிலும், உயிரியம் வடிவிலும் கிட்ட்த்தட்ட , மூவாயிரம் இராத்தல் அளவுள்ள பொருள்களே உட்கொள்ளுகின்ருேம். இவை யாவும் எங்குச் சென்றன? எங்ங்ணம் மறைந்தன் ? இவற்ருல் கமது உடலின் எடை அந்த அளவுக்கு அதிகரிக்க வில்லே, நமது எடை ஒருசில இராத்தல்கள் அதிகரித்திருக்கலாம்; அல்லது குறைந்திருக்கலாம். ஆல்ை, நாம் உட்கொள்ளும் பொருள்களில் பெரும் பகுதி கழிவுப் பொருள்களாகவே வெளியேறி விடுகின்றன. - - நமது உடலிலுள்ள கழிவுப்பொருள்கள் யாவும் தோல், பெருங்குடல், நுரையீரல்கள், சிறுநீரகங்கள் (KIDNEYS) என்ற நான்கு வாயில் களின் வழியாக வெளியேறுகின்றன. இவற்றைத் தவிரக் கருவுயிர்த்த தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதால் சிறிதளவு பொருள்களே அதிகப்படி யாக வெளிப்படுத்தலாம். எல்லாவித எரிதல் களிலும் நீரும் கரியமிலவாயுவுமே பொதுவான கழிவுப் பொருள்களாகும் என்பதை நாம் அறிவோம். நீரும் கரியமிலவாயுவும் நம்முடைய நுரையீரல்களின்மூலம் வெளிப்படுகின்றன். நாம் மூச்சுவிடுதலால் நாடோறும் கிட்டத்தட்ட ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/146&oldid=773542" இலிருந்து மீள்விக்கப்பட்டது