பக்கம்:நமது உடல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிவு மண்டலம் 1$5 வோட்டத்தை அடைந்து உடலிலுள்ள ஒவ்வோர் உயிரணுக்களுக்கும் கொண்டுபோகப் பெறு கின்றன என்று முன்னர் விளக்கினேம். இப் பொருள் உயிரியத்துடன் கலந்து எரிந்து ஆற்றலே விடுவிக்கின்றது பழச் சருக்கரையும் உயிரியமும், ரோகவும் கரியமில வாயுவாகவும் மாறுகின்றன. ஆனல், உடல் வளர்ச்சிக்கும், தேய்வடைந்த பகுதிகள் சீர்பெறுவதற்கும் பிசிதப் பொருள்கள் தேவையாகும் என்பதை நாம் அறிவோம். நம் முடைய உயிரணுக்களிலும் சுரப்பு நீர்களிலும் இப் பொருள்கள் உள்ளன. உயிரணுக்கள் சதா சிதைந்து அழிந்து கொண்டிருப்பதால், பிசிதச் சத்துள்ள கழிவுப் பொருள்கள் உண்டாகிக் கொண்டே இருக்கின்றன. இவை நீரில் கரையக் கூடியவை. சிறுநீரகங்கள் இப் பொருள்களை அகற்றுகின்றன. நீர்க் குருதியில் இவை அதிகம் தங்காமல் அகற்றப் பெறுதல் வேண்டும். சிறுநீரகங்களின் அமைப்பு நமது உடலினுள் வயிற்றறையின் பின்புறத்தில் முதுகங் தண்டை யொட்டிப் பக்கத்திற்கு ஒன்ருக இரண்டு சிறு நீரகங்கள் கெளரி-சங்கர் போல் இணைந்திருக் கின்றன. அவை சுமார் நான்கு அங்குலம் நீளம் உள்ளவை. இரண்டு சிறுநீரகங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட இதயம் அளவுக்குப் பெரியனவாக உள்ளன. ஒன்றையொன்று எதிராக நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/148&oldid=773544" இலிருந்து மீள்விக்கப்பட்டது