பக்கம்:நமது உடல்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழிவு மண்டலம் 137. நுட்பமான சிறுசிறு குழல்களாகப் பிரிந்து செல்லு கின்றது. ஒவ்வொரு கிமிடத்திலும் கிட்டத்தட்ட 1300 கன சென்டி மீட்டர் அளவுள்ள இரத்தம் சிறுநீரகங்களினுள் பாய்ந்து செல்லுகின்றது. இந்த அளவு இதயத்திலுள்ள மொத்த இரத்தத் தில் நான்கில் ஒரு பாகமாகும். இவ்வாறு இரத்தம் சிறுநீரகங்களின் வழியாகப் பாய்ந்து செல்லுங்கால் அது நன்கு வடிகட்டப்பெறுகின்றது. கழிவுப் பொருள்கள் தனியாகப் பிரிந்து சிறுநீர்க் குழல் களின் வழியாகச் சிறுசிறு துளிகளாக வடிந்து சிறுநீர்ப் பையில் திரளுகின்றது. சிறுநீர்பபை என்பது மூடிய கிலேயிலுள்ள ஒரு பை. இந்த உறுப்பு குறிப்பிட்ட காலத்தில் சிறுநீரை விடுவிப்பதற்காக அதனைச் சேமித்து வைக்கின்றது. தான் கொண்டிருக்கும் சிறுநீரின் அளவிற் கேற்றவாறு தன் நிலையினையும் வடிவத் தையும் அது மாற்றிக் கொள்ளும் இயல்பினே யுடையது. இப் பை நமது இடுப்பெலும்புக் குழியினுள் அமைந்துள்ளது. இந்தப் பை மட்டிலும் இல்லாவிட்டால் நாம் தொடர்ந்து சொட்டுச் சொட்டாகச் சிறுநீரைக் கழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்! சிறுநீர்ப் பை நிரம்பியதும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. உள்ளிருக்கும் சுருக்கு தசையை நாம் நெகிழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/150&oldid=773547" இலிருந்து மீள்விக்கப்பட்டது