பக்கம்:நமது உடல்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3:42 - நமது உடல் தோட்டங்களே அமைக்கின்றனர். வேட்டையாடு கின்றனர் ; மீன் பண்ணே, கோழிப் பண்ணே, கால்நடைப் பண்ணே. இவற்றை வைத்துப் போற்றுகின்றனர். - இவற்றையெல்லாம் நோக்கும்போது நமது உடல் ஒரு வியப்பான அற்புதப் பொறி என்பது புலப்படுகின்றதல்லவா ? சிறு சிறு பொறிகள் இப்போது இருப்பதுபோல் இருந்த நிலையிலேயே இல்லாமல் மரம் முதலியவற்றை உட்கொண்டு நாளடைவில் சிறுகச் சிறுகப் பெரியவை ஆகுமா ல்ை அஃது எவ்வளவு வியப்பாகும் இரும்புப் பொறிகள் அங்கனம் ஆவதில்லை. ஆனால், நமது உடற் பொறிகள் அங்ங்னம் ஆகின்றன! பிறக்கும் பொழுது ஏழு அல்லது எட்டு இராத்தல்கள் எடை யுள்ள குழந்தை நாள்தோறும் உணவுகளே உண்டு நூற்றுக்கு மேற்பட்ட இராத்தல்கள் எடையுள்ள மனிதனுகிவிடுவது வியப்பினும் வியப்பல்லவா ? மனிதப் பொறிக்கும் இரும்புப் பொறிக்கும் இன்ைெரு முக்கிய வேற்றுமையும் உண்டு. மனிதப்பொறிக்கு உள்ளக்கிளர்ச்சிகள் (EMorioNS) உள்ளன. இரும்புப்பொறிக்கு அவை இல்லை. உள்ளக்கிளர்ச்சி என்பது என்ன ? இதன் விளக்குவது கடினம். வெகுளி என்பது ஓர் உள்ளக் கிளர்ச்சி. அங்ங்னமே அச்சம், மகிழ்ச்சி, அன்பு, துன்பம் முதலியவையும் உள்ளக்கிளர்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/155&oldid=773552" இலிருந்து மீள்விக்கப்பட்டது