பக்கம்:நமது உடல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது உடலும் உள்ளமும் 14艾 எல்லாக் கட்டமுதையும் அவனே உண்டிருப்பான். ஆல்ை, பார்த்தசாரதி ஓர் ஆள் மானிடப் பண்புடைய ஆள். உடற் பொறியும் அவனிடம் இருக்கின்றது; ஆயினும், அவனிடமுள்ள மானிடப் பண்பே மிகவும் முக்கியமானது. ஆதலால், பார்த்தசாரதி தன்னிடமிருந்த கட்டமுதைத் தான் மட்டிலும் உண்டு தனது பசியைப் போக்கிக் கொள்ளாமல் பரந்தாமனுக்கும் பாதிக் கட்ட முதினேத் தருகின்ருன் இதுதான் உள்ளத்தைக் கொண்ட ஒர் உடற் பொறிக்கும்-மனிதனுக்கும் -உள்ளமே இல்லாத வெறும் பொறிக்கும் உள்ள மலேயனேய வே றுபாடாகும். இரும்புப் பொறிக்கும் மனிதப் பொறிக்கும் இன்னெரு வேறுபாடும் உண்டு. ஓர் இரும்புப் பொறியில் எரியையைப் (FUEL) போட்டு விட்டால், அது முடிந்து மீண்டும் அதில் எரியையைப் போடும்வரை அப் பொறி செயற்படும். மனிதப் பொறி இதையும் செய்கின்றது; இதற்கு மேலும் ஒரு படி சென்று விடுகின்றது. பின்னல் எரியை முடிந்து விட்டால் என்ன செய்கின்றது என்று எண்ணி அதனைப் பெறுவதற்கு வேண்டிய திட்டங் களேயும் அது வகுக்கின்றது. அஃதாவது, மனிதர்கள் தமக்கெனச் சேமித்து வைக்கப் பெற்றுள்ள உணவு தீர்ந்துவிடும் என்று கருதிப் பயிர்த்தொழில்களே மேற்கொள்ளுகின்றனர்; பழத்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/154&oldid=773551" இலிருந்து மீள்விக்கப்பட்டது