பக்கம்:நமது உடல்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

顶4姆 நமது உடல் கூடிய தன்மையுடையதா அது ? இந்த முறைகளி லெல்லாம் "ஆள்" என்பது இன்னதுதான் என்று வரையறைப் படுத்தி உணர முடியாது. உண்மை கிலேதான் என்ன ? நாம் ஒருவர்மீது அன்பு காட்டுகின்ருேம். நாமும் பிறரது அன்பினேப் பெற விழைகின்ருேம். நம்மிடம் கருத்துகள் உள்ளன: நாம் திட்டங்கள் வகுக்கின்ருேம் , பகற் கனவுகள் காண்கின்ருேம் , சுக துக்கங்களை உணர் கின்ருேம்; கருணை யுணர்ச்சி நம்மிடம் தோன்று கின்றது. சுருங்கக் கூறினால், நம்மை மனிதனுகச் செய்யக்கூடிய செயல்களனைத்தையும் நாம் மேற் கொள்ள விழைகின்ருேம். இந்த மானிடப் பண்பு தான் பாரதியைக் காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாடத் துாண்டியது. ஒருநாள் பரந்தாமனும் பார்த்தசாரதியும் திருமலைக்குச் சென்று அங்குப் பாபநாசம், கோ கர்ப்பம், ஆகாய கங்கை முதலிய பல இடங்கட்குச் சென்று கால்நடையாகத் தாங்கள் தங்கியிருந்த சத்திரத்தின் அறைக்குத் திரும்புகின்றனர். இருவருக்கும் தாங்க முடியாத பசி காதைத் துளைக் கின்றது. பார்த்தசாரதியின் பையில் சிறிதளவே கட்டமுது உள்ளது. ஒருவருக்கே போதாத அளவு அது. பார்த்தசாரதி சாதார ண மாக . ஒரு பொறியைப் போலிருந்திருப்பானேயாகில் அவன் தனது பசியை மட்டிலும் தணித்துக்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/153&oldid=773550" இலிருந்து மீள்விக்கப்பட்டது