பக்கம்:நமது உடல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நமது உடலும் உள்ளமும் இதுகாறும் நமது உடற்பொறியின் பல்வேறு பகுதிகளைப்பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம். இந்தப் பகுதிகள் யாவற்றையும் ஒன்று சேர இணைத்தால் நாம் உடலைப் பெறுகின்ருேம். இந்த உடலினுள்ளிருந்து இயக்கும் உள்ளமும் இந்த உடற்பொறியினுள் அமைந்து விடுகின்றது. இந்த உள்ளம் அமைந்த உடற் பொறியே "ஆள்" ஆகின்றது. பல பகுதிகள் அடங்கிய பொறிகள் இருப்பின் அவை யாவும் ஒன்றைப்போலவே பிறவும் இயங்குகின்றன. ஆல்ை, உடலின் பகுதிகள் யாவும் சேர்ந்த உடற்பொறியில் உள்ளம் அமைந்த 'ஆள்கள்” யாவரும் ஒருவர்போல் மற்றவர்கள் இருப்பதில்லை. ஒவ்வோர் ஆளும் ஒவ்வொரு வகையாகச் சிறப்பியல்பு கொண்டு விளங்கக் காண்கின்ருேம் நடத்தை, வழக்கம், மனப்போக்கு, எண்ணங்கள், நோக்கங்கள், கருத் துகள், நம்பிக்கைகள், மனப்பான்மைகள் இவை யனைத்தும் கலந்து நிற்கும் மனப்பாங்கு ஆளுக்கு ஆள் மாறுபட்டிருப்பதைப் பலரைக் கூர்ந்து நோக்கினல் எளிதில் புலகுைம். இங்கே கூறிய "ஆள்" என்பது என்ன? அதனப் பகுத்து அறியக் கூடுமா? அதனேக் கண்ணுல் காணமுடியுமா? தொட்டுதான் உணரக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/152&oldid=773549" இலிருந்து மீள்விக்கப்பட்டது