பக்கம்:நமது உடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 25 எலும்புகள் இருக்கின்றன. குழந்தை வளர வளர, இந்த எலும்புகளில் பல ஒன்று சேர்ந்து ஒற்றை எலும்புகளாக மாறி வளர்கின்றன. சாதாரண மாக ஓர் இளைஞனின் உடலில் 206 எலும்புகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். சிலரிடம் ஒன்றிரண்டு எலும்புகள் அதிகமாகவும் இருக்க லாம். அவர்கள் குழவிகளாக இருந்தபொழுது சில எலும்புகள் ஒன்று சேர்ந்து சரியாக வளரா மையே இதற்குக் காரணமாகும். இங்ங்னமே, சிலரிடம் ஒன்றிரண்டு எலும்புகள் குறைவாகவும் இருக்கலாம். இவர்கள் குழவிகளாக இருந்த பொழுது வளர்ச்சி வேகமாக நேரிட்டு இருக்கலாம். இதன் காரணமாக அவர்களுடைய கணக்கால்கள் அல்லது மணிக்கட்டுக்களில் தனித்தனியாக இருக்க வேண்டிய இரண்டு எலும்புகள் ஒன்ருகச் சேர்ந்து வளர்ந்திருக்கலாம். மண்டைஓடு (SKபட்ட): இது இருபத்தொன்பது எலும்புகளானது. மூளையை மூடிக் கொண்டி ருக்கும் மண்டை எலும்பின் உருண்டையானபகுதி மூளைக் கூடு (CRANUM) என்று வழங்கப்பெறு கின்றது. இதில் எட்டு எலும்புகள் அடங்கி யுள்ளன. கீழ்த்தாடையுடன் சேர்ந்து முகத்தில் மட்டிலும் பதின்ைகு எலும்புகள் உள்ளன. ஒவ் வொரு காதிலும் மும்மூன்ருக இரண்டு காதுகளி லும் ஆறு மிகச் சிறிய எலும்புகள் இருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/33&oldid=773587" இலிருந்து மீள்விக்கப்பட்டது