பக்கம்:நமது உடல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 鶯翻 கள் உள்ளன. மார்புக் கூட்டின் மேற்பகுதியி லுள்ள ஏழு இணைவிலா வெலும்புகள் (PARs or RES) ஒரு கோடியில் முதுகங் தண்டுடனும் மறு கோடியில் மார்பு எலும்புடனும் பொருத்தப் பெற்றிருக்கின்றன. இவை மெய் விலா வெலும்பு கள் (TRUE REs) என்று வழங்கப்பெறும். இவற்றை அடுத்து மூன்று இணவிலா வெலும்பு கள் முதுகங் தண்டுடன் இணைந்தும், முன் பக்க மாக வளைந்தும் இருப்பதையும் உற்றுநோக்குங் கள். இவை இருபுறங்களிலும் ஏழாவது விலா வெலும்புடன் சேர்கின்றன. இவை பொய் விலா வெலும்புகள்' (FALSE REs) என வழங்கப்பெறு கின்றன. இறுதியிலுள்ள இரண்டு இணைகள் முதுகந்தண்டுடன் ம ட் டி லும் இணைக்கப் பெற்றிருப்பதையும் அவை முன்புறம் பொருத்தப் படா நிலையில் இருப்பதையும் கவனியுங்கள். இவை தொங்குவிலா எsyblost (FLOATING RIBs) என்று வழங்கப்பெறுகின்றன. விலாவெலும்பு களும் மார்பு எலும்புகளும் சுமார் இரண்டங்குல நீளமுள்ள உறுதியான குறுத்தெலும்புத் (CART1. பAGE) துண்டுகளால் இணக்கப் பெற்றுள்ளன. தொங்கு விலா எலும்புகளின் நுனியிலும் குருத் தெலும்புகள் உள்ளன. இவ்வாறு இருப்பதல்ை தான். மார்புக்கூடு பல அங்குலம் விரிந்து கொடுக் கின்றது. ஏனய எலும்புகளைவிட விலாவெலும்பு கள் எளிதில் உடைங்து போகக்கூடியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/37&oldid=773591" இலிருந்து மீள்விக்கப்பட்டது