பக்கம்:நமது உடல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BÜ நமது உடல் நமது உடலில் இரண்டு காறை எலும்புகளும் (coடடARBONES), இரண்டு தோள்பட்டை எலும்பு களும் (SCAPULA) உள்ளன. இந்த இரண்டுவகை எலும்புகளின் ஏற்பாட்டில்ைதான் புயங்கள் மார்புக் கூட்டுடன் ( HORAX) இணைக்கப்பெற்றுள் னள. ஒவ்வொரு புயத்திலும் ஒரு மேற்புய எலும் பும் இரண்டு கீழ்ப்புய எலும்புகளும் அடங்கி யுள்ளன். மணிக்கட்டில் மட்டிலும் பதினறு எலும்புகள் உள்ளன. ஒவ்வோர் உள்ளங்கையும் பத்து எலும்புகளாலானது. கையின் ஐந்து விரல்களிலும் இருபத்தெட்டு எலும்புகள் அடங்கி யுள்ளன. நமது உடலில் இரண்டு இடுப்பெலும்புகள் உள்ளன. ஒவ்வொரு காலிலும் ஒரு தொடை எலும்பு, ஒரு முழங்காற்சில், ஒரு குதிரை முக எலும்பு (BIA) அல்லது முன் காலெலும்பு, ஒரு பின் காலெலும்பு (IIBULA) ஆகியவை அடங்கி யுள்ளன. ஒவ்வொரு காலடியிலும் பின்பகுதியில் பதின்ைகு எலும்புகளும், உள்ளங் காலில் (பாதத் தில்) பத்து எலும்புகளும் அடங்கியிருக்கின்றன. காலின் ஐந்து விரல்களும் இருபத்தெட்டு எலும்பு களாலானவை. பாதத்திலும் கையிலுமுள்ள எலும்புகளின் அமைப்பிலுள்ள வடிவொற்றுமை யைக் கவனியுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/38&oldid=773592" இலிருந்து மீள்விக்கப்பட்டது