பக்கம்:நமது உடல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்புகள் 31 எலும்புகளின் இணைப்பு : ஒர் எலும்பைத் தவிர நமது உடலிலுள்ள ஒவ்வோர் எலும்பும் மற்ருேர் எலும்புடன் இணைகின்றது. குதிரை லாட வடிவத்துடனுள்ள கா அடி எலும்பு மட்டிலும் வேறு எங்த எலும்புடனும் இணையவில்லை. எலும்புகள் இணையும் இடங்கள் மூட்டுக்கள் (ioNTS) என்று வழங்கப்பெறுகின்றன. இந்த மூட்டுக்கள் அசையும் மூட்டுக்கள், அசையா மூட் டுக்கள் என இரண்டு வகையுள் அடங்குகின்றன. முதல் வகையில் சேர்ந்திருக்கும் எலும்புகள் தாராள மாக அசையக் கூடியவை. தோள்மூட்டு, இடுப்பு மூட்டுக்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். இரண்டாவது வகையில் அவை அசைவதே இல்லை. மண்டையோட்டின் எலும்புகள் இம் முறையில் இணைந்துள்ளன. இணைக்கும் பொருள் : இந்த எலும்புகளே மிக உறுதியான, வளையுங்தன்மையுள்ள குருத்தெலும்பு (CARTIAGE) என்ற பொருள் ஒன்று சேர இணைக் கின்றது. முதுகங்தண்டிலுள்ள எலும்புகளையும் இந்தக் குருத்தெலும்புதான் இணக்கின்றது. குருத்தெலும்பின் வளைந்து தொய்யும் பண்பு அதற்கு அதிர்ச்சியைத் தாங்கும் ஆற்றலைத் தருகின்றது. முதுகந்தண்டின் அடிப்பகுதிகளில் ஏதாவது தாக்குதல் நேரிட்டால் முள்ளெலும்பு களே ஒன்ருேடு பிறிதொன்றினை இணக்கும் குருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/39&oldid=773593" இலிருந்து மீள்விக்கப்பட்டது