பக்கம்:நமது உடல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தசை மண்டலம் நமது உடலிலுள்ள எலும்புகள் யாவும் தாமாக அசைய முடியாது. நமது உடலின் தசைகளே அவற்றை இயக்குகின்றன. நமது எலும்புக்கூட்டின் பல்வேறு பகுதிகளையும் இயக்கு வதற்கு நமது உடலில் 600க்கு மேற்பட்ட தசைகள் இருக்கின்றன. நமது உடலின் எடையில் பாதிக்கு மேல் தசைகளில்ை ஏற்பட்டதாகும். தசை இழையக் கொத்துக்கள் இறுகப் பிணைந்துதான் தசைகளாகின்றன. தசை இழையம் நாரில்ை ஆனது. ஆகவே, தசை கிட்டத்தட்ட இறுகப் பிணைந்துள்ள இரப்பர்ப் பட்டைகளின் கொத்துப்போல் காணப்பெறுகின்றது. ஒவ்வொரு தசையிலும் ஆயிரக்கணக்கான தனித்தனி நார்கள் (FIBREs) அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் நரம்புகளுடன் இணைந்திருக்கின்றன ; மூளையின் ஆணைக்கேற்ப இவை செயற்படுகின்றன. நமது உடலிலுள்ள தசைமண்டலம் இரண்டு படங்களில் (படம் - 18, 14) காட்டப்பெற்றுள்ளன. உற்று நோக்கித் தெளிவுபெறுங்கள். நடது உடலின் சில அசைவுகள் மட்டிலுமே ஒன்று அல்லது ஒரு சிறு குழுத் தசைகளால் நடைபெறுகின்றன. ஏனைய இயக்கங்கள் யாவற் 詹 盘,一新

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/41&oldid=773596" இலிருந்து மீள்விக்கப்பட்டது