பக்கம்:நமது உடல்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் கல்லும் கண்கடலும் வைகுந்த வான்காடும் புல்என்று ஒழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல கெடியான் கிறம்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனது உள்ளத்து அகம்." -கம்மாழ்வார். "உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்; இடமும் பொருளும் நோயாளிக்கு இனிய வாழ்வு தந்திடுமோ?” என்பர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இந்த உலகில் நாம் இவ்வுடல் வாழ்க்கையைச் செவ்வனே கொண்டு செலுத்துவதற்கு வேண்டிய கருவி கரணங்கள் யாவும் நாம் பிறக்கும்பொழுதே இவ்வுடலில் அமைந்துள்ளன. இதயம், இரத்தம், மூளை, நரம்புகள், நுரையீரல்கள்; இரைப்பை, சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவை யாவும் இந்த உடல் யாத்திரைக்குத் தேவையான உறுப்புகளாகும். உயிர் நிலையான இவ்வுறுப்புகள் யாவும் சரியான நிலையிலிருப்பின் சாதாரணத் தேவைக் கேற்றவாறும், எதிர்பாராது ஏற்படும் தேவைக் கேற்றவாறும் வியத்தகு முறையில் இவை செயற் படும். நம் பிறப்புடன் நாம் பெற்றுள்ள இந்த இயற்கைத் தளவாடங்களைக் கையாளும் முறையைச் சரியாக அறிந்து கொள்வோமாயின் நம்முடைய உடல் யாத்திரை இனிதாகச் செல்லும். இது கருதியே தெய்வத் திருமூலரும் உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்று வலியுறுத்தி, உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றும், உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று, உடம்பினை யானிருந்து ஓம்புகின் 1. கம்மாழ்வார் : பெரிய திருவந்தாதி - 68. 3. கவிமணி : மலரும் மாலையும் . உடல் கலம் பேணல் - 1. 3. திருமந்திரம் . 427.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/5&oldid=773605" இலிருந்து மீள்விக்கப்பட்டது