பக்கம்:நமது உடல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi நமது உடல் றேனே என்றும் உடலோம்பலின் இன்றியமையாமையை வற்புறுத்திச் சென்றனர். இத்தகைய உறுப்புகளடங்கிய இவ்வுடலேப்பற்றி ஒரளவு நாம் நன்கு அறிந்துகொள்ளுதல் இன்றியமையா தது. எல்லோரும் எளிய முறையில் அறிந்து கொள்வதற் கேற்றவாறு தமிழ்மொழியில் உடலைப்பற்றிய நூல்கள் இல்லை என்றே சொல்லலாம். இக் குறையை ஒரளவு இந்நூல் போக்கும் என்று யான் கருதுகின்றேன். சில நுட்பமான கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு ஆங்காங் குள்ள விளக்கப் படங்கள் துணைபுரியும். அறிவியலறிஞர்கள் கண்டறிந்து விளக்கியுள்ள உடலைப்பற்றிய எத்தனையோ அரிய செய்திகள் உள்ளன. அவற்றை ஓரளவு தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இந்நூல் ஓர் அடிப்படையை நல்கும். சாதாரண மக்கட்கும் பள்ளி மாணுக்கர்கட்கும் இந் நூலறிவே ஒரளவு போதும் என்று சொல்லலாம். கடந்த நாற்பது யாண்டுகட்கு மேலாக ஆயிரத்திற்கு மேற்பட்ட அரிய நூல்களை வெளியிட்டுச் சமயப் பணியும் தமிழ்ப் பணியும் புரிந்துவரும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலையும் மனமுவந்து ஏற்றுக் கற்போர் கைகளில் கவினுடன் தவழச் செய்தமைக்குக் கழகத்தினருக்கும், சிறப்பாக அதனைச் செவ்விய முறையில் இயக்கிவரும் அதன் ஆட்சி யாளர் உயர்திரு. வ. சுப்பையாபின்ன யவர்கட்கும் என் உளங் கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். இந்த நூலே யான் எழுதி வெளியிடுவதற்கு இசைவு தந்த திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தினருக்கும் சிறப்பாக அதனைத் திறம்பட இயக்கிவரும் அதன் துணைவேந்தர் டாக்டர் : C. வாமன்ராவ் அவர்கட்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். 1. திருமத்திரம்-725,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/6&oldid=773616" இலிருந்து மீள்விக்கப்பட்டது