பக்கம்:நமது உடல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் vi; தமிழ் கூறு நல்லுலகில் தவத்திரு சித்பவாநந்த அடிகளை அறியாதவரே இரார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகட்கு மேலாகத் திருசிராப்பள்ளிக்கு அண்மையில் சற்றேறக்குறையப் பத்துக்கல் தொலைவிலுள்ள திருப்பராய்த் துறையில் இராம கிருஷ்ணத் தபோவனம், விவேகாநந்த வித்யாவனம் என்ற இரண்டு தாபனங்களை நிறுவி முறையே சமயப் பணியும் கல்விப் பணியும் புரிந்து வரும் தவச் செல்வர் இவர்; தம் பேச்சாலும் எழுத்தாலும் இப்பணிகளை மேன்மேலும் துலக் கமும் விளக்கமும் அடையச் செய்து வரும் அருட்செம்மல். இன்றுள்ளார் கண்காணும் "சுவாமி விவேகாநந்த அடிகள்:” அந்த அடிகளாரின் மறுபிறவியே இந்த அடிகளார் என்று கூறினும் சாலப் பொருந்தும். கடந்த இருபத்தைத்து யாண்டு கட்கு முன்னதாகவே என் உள்ளத்தைக் கவர்ந்து என்ன யும் ஓர் அடியனுக ஆட்கொண்ட பெருமான் இவர். இவருடைய அருள் நோக்கு சிறியேனது வாழ்க்கையினைப் புனிதமாக்கி வருகின்றது என்பது என் திடமான நம்பிக்கை. இவருடைய ஆசியால் என்னுடைய எழுத்துப் பணியும் கல்விப் பணியும் சிறக்கவேண்டும் என்பது எனது பேரவா. இத்தகைய பெருந்தவச் செல்வருடைய திருவடிகளில் இந் நூஜல அன்புடன் படைக்கின்றேன். இவருடைய ஆசியால் இத் நூலைப் படிக்கும் சிருர்கள் முதலியோருடைய வாழ்க்கையும் புனிதமாகும் என்பது என்னுடைய நம்பிக்கை. என்னையும் ஒரு பொருளாகக் கொண்டு என் உள்ளத் தில் நின்று இயக்கி என்ன இத்தகைய தமிழ்ப் பணியில் கொண்டுசெலுத்திவரும் எல்லாம் வல்ல இறையருளே மனம் மொழி மெய்களால் நினைந்து வாழ்த்தி வணங்குகின்றேன். திருப்பதி } திசம்பர் 25, 1985 க. சுப்பு ரெட்டியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/7&oldid=773672" இலிருந்து மீள்விக்கப்பட்டது