பக்கம்:நமது உடல்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. மூளையும் நரம்புகளும் ஒரு நாள் பரந்தாமன் தன் அறையில் மேசைக்கு முன்னுல் ஒரு காற்காலியில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கின்றன். மேசையில் வைத்திருந்த எழுதுகோல் (PENCIL) தரையில் விழுந்து விடுகின்றது. பரந்தாமன் அதை எடுக்க நினைக்கின்றன். இதை எளிதில் நிறைவேற்றி விடலாம் ; இதில் யாதொரு சிரமமும் இல்லை : ஒருவித சிந்தனையும் இதற்கு வேண்டுவதில்லை. ஆயினும், இந்தச் சிறிய எளிய செயலிலும் பரந்தாமன் குறைந்தது பத்திற்கு மேற்பட்ட இயக்கு தசைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. முதலில் பரந்தாமன் தரையில் எழுதுகோல் கிடக்கும் இடத்தைக் காணல் வேண்டும். இதற்கு அவன் தன் க்ண்களே அங்கும் இங்குமாக அசைக்கவேண்டும் ; எழுதுகோல் கண்ணில் படும் வரை தன் தலையை இப்பக்கமும் அப்பக்கமுமாகத் திருப்பவேண்டியிருக்கும். அதன் பிறகு அவன் எழுதுகோல் தன் கைக்கு எட்டும்வரை குனிந்து, அதனேப் பற்றி எடுத்துக்கொண்டு, பிறகு நேராக நிமிரவேண்டும். இங்குப் பத்திற்கு மேற் பட்ட இயக்கு தசைகள் பரந்தாமனின் இயக்கங் களுக்குக் காரணமாக இருப்பதுடன், அவை ஒரு சரியான ஒழுங்கிலும் செயற்படவேண்டும். கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/54&oldid=773610" இலிருந்து மீள்விக்கப்பட்டது