பக்கம்:நமது உடல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 59. நம்முடைய மூளே புத்தகம் கீழே விழுந்ததை அறிந்ததும், அஃது அந்தப் புத்தகத்தை எடுக்கத் தீர்மானிக்கின்றது. நம்முடைய மூளையினின்றும் மின் துடிப்புகள் கண்ணின் தசைகளுக்குச் செல்லுகின்றன. கண்ணின் தசைகள் நகரத் தொடங்கிப் புத்தகத்தை நம் கண்ணின் பார்வைக்குக் கொண்டு வருகின்றன. இந்நிலை முன்னணியி லுள்ள போர் வீரர்கட்குச் செய்திகளேயனுப்பிப் போரைப்பற்றிய சரியான தகவலை அனுப்புமாறு கேட்கும் சேன்னததலைவன் நிலையை யொத்திருக் கின்றது. புத்தகம் கண்ணின் பார்வைக்குள் வந்ததும், மின் துடிப்புகள் மீண்டும் நமது பெருமூளையை அடைகின்றன. இதல்ை, மூளை உணர்ந்து அறிதலாலும் நினைவு கூர்தலாலும் புத்தகத்தை அடையாளங் காண்கின்றது ; அஃதாவது, அது தான் புத்தகம்' என்பதை அறிந்துகொள்ளு கின்றது. போரினைப்பற்றிய புதிய தகவல்களைப் பெற்றதும் அவற்றின் உண்மை நிலையை உணர்ந் தறியும் சேனைத்தலைவனின் கிலேயுடன் இந்நிலையை ஒப்பிடலாம். - புத்தகம் இருக்கும் இடத்தை மூளை அறிந்ததும், அஃது நூற்றுக்கணக்கான மின் துடிப்புகளைப் பொருத்தமான நரம்புகளின் வழியாக இக் குறிப்பிட்ட நிலமையைச் சமாளிக்கும் தசைகட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/67&oldid=773626" இலிருந்து மீள்விக்கப்பட்டது