பக்கம்:நமது உடல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 நமது உடல் துடிப்புக்கள் நகர்ந்து செல்வதற்குக் காரண மாகின்றது. நம்முடைய காதுகள் போரின் எல்லையில் போர் வீரர்கள் உள்ள இடங்களைப் போன்றவை ; கேள்வி நரம்புகள் தொலைபேசிக் கம்பிகளைப் போன்றவை ; மின் துடிப்புகள் கம்பிகளில் செல்லும் கட்டளைகளைப் போன்றவை. மூளை காதுகளினின்றும் மின் துடிப்புகளே ஏற்றதும், பெருமூளையின் ஒரு பகுதி அத்துடிப் புகளே ஒலியாக உணர்ந்து அறிகின்றது. அஃது இத்தகவலைப் பெருமூளையின் மற்றெரு பகுதிக்கு -கினேவு கூரும் பகுதிக்கு-அனுப்புகின்றது. மூளையின் இப்பகுதி தகவல்களைத் திரட்டிவைக்கும் பகுதியுடன்-அஃதாவது நினவின் (ME%98) இருப்பிடத்துடன் தொடர்பு கொள்ளுகின்றது. ஏற்கெனவே, நாம் புத்தகம் விழும் ஒலியைக் கேட்டிருத்தலால், நம்முடைய மூளே உடனே அவ் வொலியை நினைவு கூர்கின்றது. இப்பொழுது நாம் புத்தகம் விழுந்துவிட்டது என்பதை அறி கின்ருேம். மேற்குறிப்பிட்ட நிலைமை போரினைப்பற்றிய தகவல்களைக் கேட்டு, அவைகளேத் தன் பயிற்சி யுடனும் அனுபவத்துடனும் தொடர்பு படுத்திப் போர் முகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியைத் தெளிவாக அறிந்து கொள்ளும் சேனைத் தலைவனின் கில்ேமையை ஒத்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/66&oldid=773623" இலிருந்து மீள்விக்கப்பட்டது