பக்கம்:நமது உடல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 159 பம்டிடிை எலும்பு (Allvi): இடைச் செவியிலுள்ள மூன்று எலும்புகளுள் ஒன்று. இது வடிவத்தால் இப்பெயர் பெற்றது. பந்தகங்கள் (Ligaments) : நார் இழையங்களாலான உறுதியான தசைப்பட்டைகளாகும் இவை. எலும்பு மூட்டுக் களை இவை இறுகப் பிணைக்கின்றன. பாய்குழல் (Artery): இதயத்திலிருந்து உடலின் பல பகுதிகளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழல். பாவை (Pupil) : விழித்திரையின் நடுவிலுள்ள வட்ட மான துவாரம். ஒருவர் கண்ணை நாம் உற்று நோக்கும் பொழுது இப்பகுதி கருநிறமாகக் காணப்படும். பிசிதம் (Protein) உணவுச் சத்துக்களில் ஒன்று. இஃது -உடல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. பித்த நீர் (Bile : கல்லீரலில் சுரக்கும் ஒருவகை நீர். இந்நீர் முன் சிறு குடலில் அகட்டுப்பாகுடன் கலக்கின்றது. புகுவாய்கள் (Receptors): தூண்டல்களை ஏற்கும் உறுப் புகள். எ - டு. செவி, கண், தோல். மணியொலியைச் செவி ஏற்கின்றது. புழுச் சுருக்கம் (Peristalsis): குடல்களில் ஏற்படும் ஒரு வித அசைவு. இது தசைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. புறச்செவி (Pinna): தலையில் வெளிப்புறமாகத் தெரியும் காதின் பகுதி. காது மடல் என்றும் இதனை வழங்குவர். பூத்தண்டு (Thalamus): மூளையின் அடிப்புறத்திலுள்ள திரண்ட சாம்பல்நிறப் பகுதி. உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் எல்லா நரம்புகளும் இதன் மூலமாகவே செல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/98&oldid=773727" இலிருந்து மீள்விக்கப்பட்டது