14
நமது முழக்கம்
மூன்றாவது வழி
முதலாளித்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்க இன்னொன்றும் செய்யலாம். தனிப்பட்ட எவரும் எந்த தொழிற்சாலையையும் எடுத்து நடத்த அனுமதிக்கக் கூடாது. முதலாளிகளிடமிருக்கும் எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக்கொள்ள வேண்டும். எல்லா தொழிற்சாலைகளையும் சர்க்கார் எடுத்து நடத்தவேண்டும். அவ்விதம் செய்தால் அதில் கிடைக்கும் லாபம் அரசாங்கத்தைச் சாரும். எந்த தனிப்பட்ட முதலாளியையும் சாராது. அதனால் முதலாளித்துவம் வளராது. பூண்டே இல்லாமல் ஒழிந்துவிடும். அப்படித்தான் இன்றைய உலகில் பலர் செய்து வருகிறார்கள்.
நான்காவது வழி
முதலாளிகள் அதிக சரக்கை தயார்செய்து, அகண்ட தன் நாடு பூராவிலும் விற்று, நிறைய லாபம் சம்பாதித்து பெரிய முதலாளிகள் ஆகிறார்கள். இம்முறையை ஒழிக்க வேண்டும். முதலாளிகள் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில்தான் வியாபாரம் செய்யலாம்; அதற்குமேல் செல்ல வேறு அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும் என்ற முறை இருக்கவேண்டும். அதாவது மிகப் பெரிய நாடுகளை இரண்டு அல்லது மூன்றாகப் பிரித்துவிடவேண்டும். பரந்த பெரிய நாடுகளை சிறிய நாடுகளாக்கிவிட வேண்டும்.
நாட்டுப் பிரிவினையைக் கைக்கொண்டு சிறிய நாடுகளாக்கிவிட்டால் நிச்சயமாக. முதலாளித்துவம்