அண்ணாதுரை
15
வளராது. இந்த முறை பல நாடுகளில் உள்ளன. நார்வேயும், ஸ்வீடனும் தனி நாடுகளாக இருப்பதால் தான் அங்கு முதலாளிகள் இல்லை. ஆகவே நான்காவது வழி ‘திராவிடநாடு திராவிடருக்கே!’ என்று நாம் கூறுகிறோம். இது சிலர் ஏற்காமலிருக்கலாம். ஆனால் இது தான் நான்கில் ஏற்கக்கூடியது என்பது உண்மை!
கூட்டு வியாபாரம்
முதலாளிகளை இந்த வழிகளில் குறைத்துவிடலாம். இதனால் முதலாளித்துவம் தேய்ந்து மறைந்துவிடும். இன்று முதலாளிகள் ஒன்றாகச் சேருகிறார்கள். முதலாளிகள் ஒன்று சேர்ந்து கூட்டு வியாபாரம் நடத்துகிறார்கள். ‘ஒரு புதிய தொழிற்சாலையை ஆரம்பிக்க இவ்வளவு பணமா தேவை! நான் 10 லட்சம் போடுகிறேன். நீ 25 லட்சம் போடு’ என்று கூட்டுத் தொழில் நடத்துகின்றனர். அதனால் மேலும் மேலும் பலமடைகிறார்கள். ஆகையால் அதைத் தடுக்கவேண்டும்.
முதலாளித்துவம்—ஒரு யானை
முதலாளித்துவம் ஒரு மதம் பிடித்த யானை. அந்த யானையைப் பிடித்து, வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி, அந்தக் கயிறை ஒரு வாழை மரத்தில் கட்டி விட்டு, ‘பார், பார் நான் முதலாளித்துவத்தைக் கட்டிப் போட்டுவிட்டேன்’ என்று கூறினால் சரியா?
யானை ஒரு இழுப்பு இழுத்தால் அதன் கட்டு அறுந்து விடும். அது மட்டுமா? விடுபட்டதும் தான் கட்டப் பட்டிருந்த வாழை மரத்தையே கூட வாயில்