அண்ணாதுரை
19
தால் மறு காலின் துணி மேலே போகிறது, வேறு காலை எடுத்து வைத்தால் இந்தக் காலின் துணி மேலே போகிறது, வேகமாக நடந்தால் பின்னால் அவிழ்கிறது, அவசரமாக குனிந்தால் முன்னால் அவிழ்கிறது இவ்வளவு தொல்லையான அதை அவர்கள்கூட விரும்ப மாட்டார்கள். ஆகவே நம்மையும், அவர்களையும் பிடித்து ஆட்டும் ஆரியம் அழிய வேண்டும்.
ஸ்டாலின் சொன்னார்
மாவீரன் ஸ்டாலின் ஜெர்மானியரை எதிர்க்க விடுத்த வேண்டுகோளில் ‘I call the Slaus’ என்று அழைத்தார். நான்ஸ்லாஸ் இனத்தாரை அழைக்கிறேன் என்றார். அவர் அங்கே உலக மக்களை அழைக்கவில்லை. ஜெர்மானியரை எதிர்த்துப் போராட ஸ்லாவியர்கள் தேவை, அவர்களுக்குத் தான் சிறப்பாக திறமை இருக்கிறது—ஜனநாயகப் பற்று இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். ஆனால் இங்கு சிலர், அவர் வழி நடப்பதாகக் கூறிக்கொள்வோர், டெல்லி சர்க்காரை எதிர்க்கும் நம்மை நையாண்டி செய்கிறார்கள்.
ரஷ்யாவில் ஜார்ஜியர்கள்
ரஷ்யாவிலே ஜார்ஜியா என்று ஓரிடம்; ரஷ்ய மாவீரன் ஸ்டாலின் பிறந்த இடம் அது. இன்றைய தலைவர் மலெங்கோவும் அங்கு பிறந்தவர்தான்.நம் ஆதித்தன் அங்கு சென்றிருந்த போது அங்கு கூடியிருந்த மக்களிடம் கேட்டாராம் ‘நீங்களெல்லாம் ரஷ்யர்கள் தானே’ என்று. அவர்கள் என்ன பதில் சொன்னார்கள்?