20
நமது முழக்கம்
கேட்ட ஆதித்தனைப் பார்த்து, கைக் கொட்டி சிரித்தார்களாம்.“நாங்கள் ரஷ்யர்களா? யார் சொன்னது? நாங்கள் ஜார்ஜியர்கள்” என்று கூறினார்களாம்.
ரஷ்யாவிலே, ஜார்ஜிய பகுதியினர் தங்களை ஜார்ஜியர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். இதை நண்பர் ஆதித்தன் அவர்கள் என்னிடம் குறிப்பிட்டு, “அண்ணாதுரை நீங்கள் ரஷ்யாவிற்குச் சென்று திராவிட நாட்டுப் பிரச்சினையைக் கூறினால் ஒத்துக்கொள்ளுவார்கள்” என்று கூறினார்.
நான் காரன்ஸ்மித் நகர் மைதானத்தில் பேசும்போது இதைத்தான் குறிப்பிட்டேன், ‘மாஸ்கோவிற்குச் செல்லுவேன். மலெங்கோவிடம் சொல்லுவேன்’ என்று.
பேனா எடுத்தார்; எழுதினார் !
இது பொறுக்கவில்லை நண்பர் ஜீவானந்தத்திற்கு. பேனாவை எடுத்தார், எழுதினார், இரண்டு பக்கம்.
‘நீயாவது மலெங்கோவையாவது, பார்ப்பதாவது’ என்று எழுதினார்.
நானாக யாரையும் போய் பார்க்கும் வழக்கம் என்னிடம் இல்லை. அப்படி யாரையாவது பார்க்க வேண்டும் என்று விரும்பினால், ‘நீ வரக்கூடாது’ என்று தடுப்பவர்களுமில்லை. இதற்கு மலெங்கோ மட்டும் விதிவிலக்கா?
இவர் பேச்சும் எழுத்தும் ரஷ்யா வரை செல்லும் என்றிருந்தேன். அது கல்கத்தாவிற்கப்புறம் கால்