அண்ணாதுரை
21
வைக்காது என்பதைத் தெரிந்து கொண்டேன். நானாக செல்ல முடியும், நான் இஷ்டப்பட்டால் பார்க்கவும் முடியும்.
மலெங்கோவின் ஆட்சியில்........
உலகம் முழுவதற்கும் பொதுவுடமைக் கட்சிக்கு தலைமை ஸ்தாபனமாக ரஷ்யாவில் இருந்த தலைமை ஸ்தாபனத்தை (காமின்பாரம்) மலெங்கோவின் ஆட்சியில் கலைக்கப் போகிறார்கள். இதை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு நாட்டிலும், பொதுவுடமைக் கொள்கையை அவ்வவ் நாட்டின் நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். விரைவில் ரஷ்யாவில் உள்ள தலைமை ஸ்தாபனத்தைக் கலைக்கப் போகிறார்கள்! மிக விரைவில்!
நண்பர்கள் நாம் தான்
ஆனால் கம்யூனிஸ்ட் நண்பர்கள் நம்மீது சீறுகிறார்கள். நண்பர் ஜீவானந்தம் எதிர்க்கிறார், ராமமூர்த்தி மறுக்கிறார்.
பிரிவினையில் பொதுவுடமை இருக்கிறது. இப்போழுது ஆத்திரப்பட்டு கொஞ்சம் ஆவேசமாக நம்மைத் திட்டுபவர்கள், கொஞ்சம் பொறுத்து அவகாசமாக அலசிப் பார்த்தால் உண்மையை அறிவார்கள் என்று நம்புகிறேன். நான் மீண்டும் கூறுகிறேன், தென்னாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கும் நண்பர்கள் நாம் தான்! நம்மைத் தவிர வேறு நண்பர்கள் தென்னாட்டில் அவர்களுக்கு, நிச்சயமாக வேறு யாருமில்லை.