உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது முழக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாதுரை

35



கேற்ற வசதி, சக்திக் கேற்ற உழைப்பு! சர்க்கார் இதை முறைப்படி வகுக்க வேண்டும். அதிகமாக வேலை செய்யும் மாட்டின் மீது நாம் கவனம் செலுத்துகிறோம். தொழிலாளிக்கோ என்றும் ஒரே நிலை! தொழிலாளி மேனி கறுக்க உழைக்கிறான்; அவன் உற்பத்தியைப் பெருக்கா விட்டால் நமக்கு உணவேது? உடையேது? வெளியிலிருந்தெல்லாம் சென்னையில் வந்து குடியேறிய மக்களுக்கு வீடேது? தொழிலாளியின் உழைப்பாலன்றோ பிர்லாவின் பணப்பை நிரம்பியது. மிட்டாதாரும், மிராசுதாரும் எப்படி உயர்ந்தார்கள். அவர்கள் நாட்டில் சில நாளும் நகரத்தில் சில நாளும் எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்? தொழிலாளியின் இடைவிடா உழைப்பாலன்றோ இவர்கள் வாழ்கிறார்கள். உழைத்து உழைத்து உருக்குலைந்த பாட்டாளி உரிமைகள் கேட்டால் சிறையிலே சுட்டுத் தள்ளப்படுகிறான். நாகரிக சர்க்காரா இதைச் செய்வது?

நாட்டிலே ஏராளமான பஜனை மடங்களுண்டு, ஆனாலும் மக்களுக்குப் பசி தீர உணவு கிடைப்பதில்லை. வற்றாத ஜீவ நதிகள் இருந்தும், வாழ்க்கையில் மக்கள் வெற்றிபெற முடிவதில்லை. கொஞ்சம் கனமான சாமானைத் தூக்க வேண்டுமென்றால் கூட நாம், ‘ராமா, ராமா’ என்று சொல்லிக்கொண்டுதான் தூக்குகிறோம். முதலாளி கூலி குறைவாகத் தந்தால், அவனை நோகாமல், ஆண்டவனையே நோக்கி, “ஆண்டவனே, உனக்குக் கண்ணில்லையா? ஏழைபடும் பாடுனக்குத் திருவுளச் சம்மதமோ, இது தகுமோ, இது முறையோ?” என்று சொல்லி இறைவனைப் பார்த்து மக்கள் ஏங்குவதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/35&oldid=1770534" இலிருந்து மீள்விக்கப்பட்டது