உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது முழக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நமது முழக்கம்



புக் காய்ச்சி உருக்குபவன், இயந்திரங்களை உருக்குபவன் யார்? தொழிலாளி!

மிராசுதாரர்களின் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்குகிறவன் தொளிலாளி, விஞ்ஞானத்தின் அற்புதங்களிடையே, உயிரை ஆபத்துக்குள்ளாக்கி விளையாடுபவனும் தொழிலாளி தான்.

கடலில் மூழ்கி முத்து எடுப்பவன் தொழிலாளி; உழுது நன்செய் பயிரிடுபவன் தொழிலாளி. அந்தத் தொழிலாளி இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் தான் இந்த மே தினம்.

மனிதன் உணவு உண்கிறான். மிருகமும் உணவு உண்கிறது. மனிதன் காதல் புரிகிறான். மிருகமும் காதல் புரிகிறது. மக்களிலே ஆணும் பெண்ணும் மருவுகின்றனர். விலங்குகளிலும் அப்படியே. மனிதன் பிரஜா உற்பத்தியில் ஈடுபடுகிறான். மிருகமும் பிரஜா உற்பத்தியில் ஈடுபடுகிறது. ஆனால் மிருகத்திற்குத் தேவைக்கேற்ற வசதி இருக்கிறது. மனிதனுக்கோ தேவைக் கேற்ற வசதி இல்லை.

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கியமாக வேண்டியவை உணவு, உடை, இருப்பிடம். உணவு வியாபார பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. உடை வியாபாரப் பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. இருப்பிடம் வியாபாரப் பொருளாக ஆக்கப்பட்டிருக்கிறது. இம்மூன்று துறையிலும் பயன்படுத்துவோர் மட்டு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_முழக்கம்.pdf/38&oldid=1770537" இலிருந்து மீள்விக்கப்பட்டது