அண்ணாதுரை
37
இராகு காலம் பார்க்கிறார்கள்; சகுனம் பார்க்கிறார்கள். இன்னும் தாழ்ந்த நிலையிலே இருக்கிறார்கள்! ஆதியிலே இருந்து, தலைமுறை தலைமுறையாகத் தொழிலாளரின் உள்ளத்திலே, வாழ்விலே தூவப்பட்ட இந்த மாதிரியான நச்சுப் பொடிகளைத் திராவிட முன்னேற்றக் கழகம் தான் பறக்கடிக்கிறது. அதன் காற்றுத்தான் அவற்றை அகற்றுகிறது. அதன் தென்றல் மணம் தான் அவற்றின் நச்சு வாடையை ஒழிக்க முடியும். இது மட்டுமா? இந்த நாட்டிலே தொழிலாளரின் உள்ளத்திலே நடமாடும் எண்ணங்கள், கருத்துக்கள் மாறுபடாமல் அப்படியே இருந்து வர அனுமதி தந்துவிட்டு, மூடத்தனம், அறியாமை, குருட்டு நம்பிக்கை இன்னபிற வளர வழி வகுத்துவிட்டு, பொருளாதார முன்னேற்றம், அரசியல் உரிமை, தொழிலாளர் நலன் காக்கும் பாதுகாப்புகள் அளித்துத் தொழிலாளர் என்ன பயன் காணமுடியும்?
உலகம் மாயம் இல்லை. உழைப்பவன் வாழ்வும் மாயமன்று. ஆனால் உழையாதவன் உல்லாசத்தில் தான் மாயம் இருக்கிறது. உழைப்பின் பெருமையை உணர வேண்டும்; உல்லாசத்தின் ஊற்று, செல்வத்தின் பிறப்பிடம் எங்கே இருக்கிறது என்பதை அறியவேண்டும்.
உருண்டோடுகிற ரயிலை ஓட்டுபவன் யார்? தொழிலாளி! வானத்திலே ஒய்யாரமாகப் பறக்கும் விமானத்தை ஓட்டுபவன் யார்? தொழிலாளி! இழையை நூற்று நல்லாடைநெய்பவன் யார்? தொழிலாளி! இரும்-