அண்ணாதுரை
7
முதலியவற்றில் சேர்ந்திருப்பார்கள். ஆனால் இந்த நாட்டுத் தொழிலாளரின் ஜனத்தொகையில் நூற்றுக்கு நாற்பது பேர்தான், ஒரு குறிப்பிட்ட தொழிற் சாலையையோ, தொழிற் சங்கத்தையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மற்றத் தொழிலாளர்கள் குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையையோ, அல்லது ஒரு தொழிற் சங்கத்தையோ சாராதவர்கள்.
அவர்களில் பலர் வயிற்றைக் கழுவ வண்டியிழுப்பவர்கள்; அவர்களில் பலர் முதுகெலும்பு முறிய மூட்டைச் சுமப்பவர்கள்; அவர்களில் பலர் காடுகளில் சென்று கட்டை வெட்டுபவர்கள். அந்தத் தொழிலாளர்களுக்கும் ஆசை மனைவியும், அன்பு மக்களும் இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்கள், தொழிலாளர்களின் ஜனத்தொகையில் சேர்க்கப்படாதவர்கள். குறிப்பிட்ட தொழிற்சாலையில் வேலை செய்யாதவர்கள். அரசாங்கத்தின் தொழிற் சட்ட திட்டங்களுக்கு உட்படாத தொழிலாளர்கள்.
நாம், இணைப்புப் பாலம்
தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல பிணைப்பை, இணைப்பை நாம் ஏற்படுத்துகிறோம். தொழிலாளர்களின் நிலையை, ஆட்சியாளர்களுக்கு அறிவிப்பதோடு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கிறோம். மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்தியில் நாங்கள் இணைப்புப் பாலமாக இருக்கிறோம்.
தொழிலாளர்களின் போராட்டங்களை மக்கள் ஆதரிக்காமல் இருக்க, அது தொழிலாளர், முதலாளி