6
நமது முழக்கம்
பாடல்களைக் கேட்டுக் கொண்டு, குடும்பத்துடன் குதூகலமாக, நண்பர்களுடன் உலாவிக் கொண்டு இருக்க வேண்டியவர்களாகிய நாம் (சிலர் அப்படித்தான் இருப்பார்கள் இப்போது) தொழிலாளர்களின் துயர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். பொதுவுடமைக்கும் நமக்கும் உள்ள பொருத்தங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம். யார் சக்தி வாய்ந்தவர்களோ யாரால் அரசுகளை ஏற்படுத்த முடியுமோ, யாரால் அரசுகளை கவிழ்க்க முடியுமோ, அவர்களிடம், மக்களிடம் பேசுகிறோம்.
வித்தியாசம் உண்டு
பற்பல நாடுகளில் மே விழா கொண்டாடுகிறார்கள். இங்கு நாமும் மே தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆனால் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அது உண்மையே, மற்ற கட்சியினருக்கும், நமக்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் நாட்டிலே செய்வதை, பேசுவதை நாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அவர்கள் கூறுவதை மக்களிடம் விளக்கிக் கூறுகிறோம்.
இன்று மேதினியெங்கும் மே தினம் கொண்டாடப்படுகிறது. எத்தனையோ தொழிற் சங்கங்கள் இந்த நாட்டில் மே தினத்தைக் கொண்டுகிறார்கள்.
நூற்றுக்கு நாற்பது பேர்
ஒரு நாட்டில் உள்ள தொழிலாளரின் ஜனத்தொகையில் பெரும்பான்மையோர் தொழிற் சங்கம்