நமது முழக்கம்
திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆண்டு தோறும் கொண்டாடி வரும் மே தினத்தைக் கொண்டாடவே இங்கே நாம் கூடியிருக்கிறோம். இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் திருவல்லிக்கேணி திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு என் நன்றி!
சென்னையில் வேறு சிலர்
இங்கு நாம் மே தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் சென்னையில் பலர் பற்பல இடங்களில் மே தினக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். இதே நேரத்தில் நண்பர் ஜீவானந்தம், காரன்ஸ் ஸ்மித் நகர் மைதானத்தில் பொருளாதாரத்திற்கும் பொதுவுடமைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்கக் கூடும். ஹைக்கோர்ட் கடற்கரையில், இந்த நேரத்தில் சில நண்பர்கள் சமதர்மத்தையும், சமுதாயத்தையும் பற்றி பேசிக் கொண்டிருக்கக் கூடும். இன்னும் வேறு சிலர் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கக் கூடும்.
மக்களிடம் பேசுகிறோம்
உலகத்திலேயே இரண்டாவது அழகிய கடற்கரை என்று கூறப்படும் இந்த அழகான கடற்கரையிலே, அற்புதமான காற்றை அனுபவித்துக்கொண்டு, நல்ல