பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பார்வகிபாய் அதவலே சில இடங்களுக்குச் சென்று பொருள் திரட்டலாம். என்று பார்வதிபாய் திர்மானித்தார். ஆணுல், அவ்விதம் புறப்பட முயலும்போது எதிர்பாராத ஓர் இடையூறு நேரலாயிற்று. பாாவதிபாயின் மைந்தராய் நாராயணருக்கு த் திடுமெனக்காய்ச்சல் கண்டது. அந்தக் காய்ச்சல் கம் அம்மையார் புறப்படுவதற்குள் 1049 அளவுக்கு வெப்பங் கொண்டு வீசியது. தம் அருமைமைந்தர் அத்தகைய நிலையில் இருந்தபோது அம் மைந்தரை விட்டுச் செல்ல அம்மையாருக்கு எவ்விதம் உள்ளம் துணியும் ? ஆதலால் அப்போது அவர் பெரிதும் தயக்கம் உற்ருர் பொதுநலத்திலே ஈடுபடுவோர்க்கு எத்தகைய பற்றும் இருத்தல்கூடாது. என்பது பெரியார் கார்வேஅவர்தம் கருத்து. ஆதலால், அப்போது அவர் கம் அம்மையாரை நோக்கி, பார்வதி, நீ இங்கே இருப்பதல்ை உன் மைந்தன் அடையக்கூடிய தன்மை என்ன? அவன்கோயினை உன்னுல் வாங்கிக்கொள்ள முடியுமா ? நாம் ஒரு நன்மை புரியத் துவங்கும்போதுதான் கமக்குப் பல இடையூறு வந்துசேரும். பொதுநலத் தொண்டர்கள் அப்போது உள்ளம் தளராமல் உறுதியாக இருத்தல் வேண்டும். ஆதலால் சிறிதும் தயங்காமல் புறப்படு. இங்கே உள்ள வேணு பாயும், காசிபாயும் உன்னிலும் பன்மடங்கு கருத்தாக இருந் து உன் மகனேக் கவனித்துக்கொள்ளுவார்கள் ' என்பனபோன்ற பல்ப்பல அறிவுர்ை கூறி அவ் வம்மையாரைத் தேற்றிப் பொருள் திரட்ட அனுப்பினுர்.